போரூரில் 16.60 ஏக்கரில் ரூ.12.60 கோடியில் ஈரநிலை பசுமை பூங்கா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

பூந்தமல்லி: போரூரில் 16.60 ஏக்கரில் ரூ.12.60 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் ஈரநிலை பசுமை பூங்கா பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்து பணிகுறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பீட்டில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பூங்காவில் 103 இருக்கைகள், நடைபாதை, செங்கல் நடைபாதை, கருங்கல் நடைபாதை, கூடைப்பந்து விளையாட்டு மைதானம், அனைத்து வகையான விளையாட்டு மைதானம், 6.85 ஏக்கரி ஏரி, திறந்தவெளி உடற்பயிற்சி மைதானம், பார்க்கிங் வசதி, கழிப்பிட வசதி, கடைகள், மின்விளக்கு வசதி, சிசிடிவி கேமரா வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று காலை பூங்கா பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பூங்கா பணி குறித்தும், எப்போது பணி முழுமையாக நிறைவுபெறும் என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பூங்காவில் கூடுதலாக மின்விளக்கு மற்றும் பாதுகாப்பு வசதி செய்வது குறித்தும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, காரம்பாக்கம் க.கணபதி எம்எல்ஏ, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மண்டல குழுத்தலைவர் நொளம்பூர் வே.ராஜன், சிஎம்டிஏ தலைமைத்திட்ட அமைப்பாளர் எஸ்‌.ருத்ரமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாலமுருகன், செயற்பொறியாளர் ராஜன்பாபு, மாமன்ற உறுப்பினர் ஹேமலதா கணபதி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post போரூரில் 16.60 ஏக்கரில் ரூ.12.60 கோடியில் ஈரநிலை பசுமை பூங்கா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: