கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினர் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவை: கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.300 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமையவுள்ளது

கோவையின் அடையாளங்களில் ஒன்றாக அமையவுள்ள, 8 தளங்களில், மொத்தமாக 1,98,000 சதுரடி பரப்பளவில், ரூ 300 கோடி மதிப்பில் அமையவிருக்கும் தமிழினத்தலைவர், டாக்டர் கலைஞர் நூற்றாண்டு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இதில், குழந்தைகளுக்கான நூலகம், போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் நபர்களுக்கான நூலகம், டிஜிட்டல் நூலகம் மற்றும் தமிழ், ஆங்கிலம் என தனித்தனி பிரிவுகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இது தவிர, கழிவறை, லிப்ட் உள்ளிட்ட வசதிகளும் இடம் பெறவுள்ளது. மாணவர்கள், பொதுமக்களுக்காக பல லட்சம் கணக்கான புத்தகங்கள் நூலகத்தில் இடம்பெற உள்ளது.

பின்னர் பேசிய முதலமைச்சர் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை நேரில் ஆய்வு செய்ய மாவட்டந்தோறும் ஆய்வு செய்கிறேன். மாவட்ட வாரியான ஆய்வை முதலில் நான் கோவையில் மேற்கொண்டுள்ளேன். செந்திலை பாலாஜியின் வேகமான செயல்பாடுகளை முடக்க தடைகளை ஏற்படுத்தினார்கள். தடைகளை உடைத்து மீண்டும் செந்தில் பாலாஜி கோவை வளர்ச்சிக்கு பாடுபடுகிறார்.

80 ஆண்டுகளுக்கு பிறகு தமிழன் எப்படி இருக்க வேண்டும் என்று கூறியவர் பெரியார். கோவையின் அடையாளமாக செம்மொழி பூங்கா மாறும். 2026 ஜனவரி மாதம் கோவையில் நூலகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும். திமுக ஆட்சியில் ஒரு திட்டத்தை அறிவித்தால் அதை குறிப்பிட்ட காலத்தில் திறந்து வைப்போம். இந்தியாவிலே முதல் வேளாண்மை பல்கலைக்கழகம் கோவையில் தொடங்கப்பட்டது.

கோவையில் ரூ.126 கோடியில் தொழில் வழக்கம் அமைக்கப்படும். நேற்று கோரிக்கை வாய்த்த நிலையில் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். ரூ.36,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் வகையில் வளாகம் அமைக்கப்படும். கோவை தொண்டாமுத்தூரில் ரூ.7 கோடி நவீன பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும்.

அனைத்து மக்களுக்கு அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை விட திமுக செல்வாக்கு அதிகரித்துள்ளது. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவின் 2 வது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் 20 சதவீதம் தமிழ்நாட்டில்தான் உள்ளது என்று கோவையில் நூலகம் மற்றும் ராய்வியல் மையத்துக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.

The post கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: