×

மது போதையில் இருந்த மாநகராட்சி தூய்மைப்பணியாளரை தாக்கியவர் கைது

திருப்பூர்,நவ.5: திருப்பூர், காவிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (34). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப்பணியாளராக பணியாற்றி வருகிறார். சிவராஜ் நேற்று முன்தினம் பணி முடித்து மது அருந்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிவராஜ் அவருடைய உறவினர் ரவி என்பவருடன் சேர்ந்து தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அருகில் குடியிருக்கும் லட்சுமணன், அவருடன் இருந்த பாலாஜி, நாகேஷ் ஆகியோர் சேர்ந்து சிவராஜிடம் அருகில் பெண்கள் இருப்பதால் தகாத வார்த்தைகளில் பேச வேண்டாம் என கண்டித்துள்ளனர்.

இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன், பாலாஜி, நாகேஷ் ஆகியோர் கட்டையால் சிவராஜ், ரவி ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் 15. வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமணன் (36) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த பாலாஜி, நாகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

The post மது போதையில் இருந்த மாநகராட்சி தூய்மைப்பணியாளரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Sivaraj ,Kavilipalayam ,Shivraj ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!