×

உடைந்த பாலத்தால் மக்கள் தவிப்பு

கோவை, நவ.6: கோவை அவினாசி ரோடு பீளமேடு மின் வாரிய அலுவலகம் அருகே சாக்கடை பாலம் இருக்கிறது. இந்த பாலத்தின் ஒரு பகுதி உடைக்கப்பட்டது. இதற்காக ரோட்டின் ஒரு பகுதியை முடக்கி விட்டனர். உடைந்த பாலத்தில் கான்கிரீட் தளம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் எந்த பணியும் நடக்கவில்லை. இந்த வழியாக செல்பவர்கள் சாக்கடை பள்ளத்தில் தவறி விழும் வாய்ப்பு இருந்ததால் அந்த இடத்தில் பேரிகார்டு வைத்து அடைத்து விட்டனர். பள்ளத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சாக்கடை நீர் கலக்கிறது. நகரின் பெரிய சாக்கடை பள்ளமாக இருப்பதால் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

அவினாசி ரோடு மேம்பாலம் கட்டும் பணியும் இந்த பள்ளத்தை ஒட்டியுள்ள இடங்களில் நடக்கிறது. எனவே இடம் குறுகலாக இருக்கிறது. பணிகளை விரைவாக முடித்தால் தான் வாகனங்கள் தடையின்றி செல்ல முடியும் என பீளமேடு பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

The post உடைந்த பாலத்தால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Beelamedu Electricity Board ,Coimbatore Avinasi Road ,Dinakaran ,
× RELATED தாயை இழந்து தவிப்பு; முதுமலை முகாமில் குட்டி யானை பராமரிப்பு