×
Saravana Stores

விதிகளை மீறும் மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு


மதுரை: மதுரை, மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதை இலக்காக கொண்டுள்ளது. ஆனால் சில தனியார் மதுக்கடைகளுக்கு மனமகிழ் மன்றங்கள் எனும் பெயரில் அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்த மனமகிழ் மன்றங்களில், அச்சங்கத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே மது விற்க முடியும். ஆனால், எப்எல்2 உரிமம் பெற்ற சில மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோதமாக உறுப்பினர் அல்லாதவருக்கும் மதுவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. விதிகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்களின் உரிமத்தை ரத்து செய்யுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியா கிளெட் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘மனமகிழ் மன்றங்கள் அனைத்தும் மாதந்தோறும் 2 முறை தாசில்தார் உள்ளிட்ட கலால்துறை அதிகாரிகளால் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், விதிமுறைகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, அனைத்து மனமகிழ் மன்றங்களும் விதிப்படி செயல்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டார்.

The post விதிகளை மீறும் மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Managiri ,Selvakumar ,iCourt ,Tamil Nadu government ,Manajoy Manorams ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில், FL 2 உரிமம் பெற்ற மனமகிழ்...