தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 6000 முதல் 7000 அரசுப்பணியில் இல்லாத மருத்துவர்கள் முதுநிலை மருத்துவ தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். ஆண்டுதோறும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வும் நடைபெறுவதில்லை. இதனால், முதுநிலை மருத்துவ படிப்பிற்கு (MD, MS) போட்டியிடும் அரசு சாரா மருத்துவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்துடன் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்பில் பல்வேறு சலுகைகள் மற்றும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுகிறது.
இதனால் அரசு சார மருத்துவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழக அரசு, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கும், அரசுப் பணியில் இல்லாத மருத்துவர்களுக்கும் சமவாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஓர் நிபுணர் குழுவை அமைத்து ஆராய வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பாததால், மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. எனவே, காலியாக உள்ள 2500 அரசு உதவி மருத்துவர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காசநோய், ஆஸ்துமா போன்ற ஜெனரிக் மருந்துகளின் விலையை ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது. இதன் விலையை குறைத்து மக்கள் மருந்தகங்களில் விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post முதுகலை பட்டப்படிப்பில் அரசு சாரா மருத்துவர்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.