நேற்றிரவு ஒரு மணி அளவில் ஒரு வழக்கு விசாரணைக்காக மேற்கண்ட இருவரும் சென்னையில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி பைக்கில் சென்றுள்ளனர். ஜெயவாகனத்தை இயக்கியதாக தெரிகிறது. மேல்மருவத்தூர் அருகே உள்ள சிறுநாகலூர் பகுதியில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவர்களின் பைக் மீது மோதியுள்ளது. இதில் அந்த கார் சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த எஸ்ஐ ஜெய சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து காரை ஓட்டிவந்த நபர், லேசான காயத்துடன் அங்கிருந்து ஓடிவிட்டார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நித்யாவை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு உடனே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று அதிகாலை நித்யாவும் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மேல்மருவத்தூர் போலீசார் சென்று விசாரித்தனர். விபத்தில் சிக்கி சேதம் அடைந்த காரை மீட்டு காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுசம்பந்தமாக வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்திய டிரைவரை பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேல்மருவத்தூர் அருகே அதிகாலை நடந்த விபத்தில் சென்னையை சேர்ந்த பெண் எஸ்ஐ, ஏட்டு ஆகியோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் இறந்த ஜெயயின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் கூலூர் புதூர் கிராமம். இவரது கணவர் ஜான். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர்களது மகன் விகாஷ் (15), மகள் விகிதா (10). இவர்கள் படிக்கின்றனர்.
ஜெய சமூகவலைதள பக்கத்தில் பிரபலமாக திகழ்ந்துவந்துள்ளார். போலீஸ் தொடர்பான ஏராளமான பதிவுகள் போட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் பெரும்பாலான குற்றவாளிகளை தனியாக சென்று பிடித்து சாதனை படைத்துள்ளார். இதன்காரணமாக ஜெயக்கு காவல்துறையில் தனி மரியாதை இருந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த நித்யாவின் சொந்த ஊர் திண்டுக்கல் அருகே கொசவம்பட்டி கிராமம். இவரது கணவர் மற்றும் குடும்பம் பற்றிய விவரம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே விபத்து ஏற்படுத்தி தப்பியோடிய கார் டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம் புன்னம்குப்பம் பகுதியை சேர்ந்த மதன்குமார் (24) என்பவரை கைது செய்தனர். விபத்து தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மேல்மருவத்தூர் அருகே அதிகாலை; பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் எஸ்ஐ, ஏட்டு பரிதாப சாவு: சென்னையை சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.