உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழப்பு..!!

அல்மோரா: உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். கார்வால் மோட்டார் ஓனர்ஸ் யூனியன் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்து கார்வாலில் இருந்து குமாவோனுக்குச் சென்று கொண்டிருந்தது. குறைந்தது 40 பயணிகளுடன் சென்ற பேருந்து
அல்மோராவில் உள்ள மார்ச்சுலாவில் குபி கிராமத்திற்கு அருகே கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலை அறிந்து போலீசார் மற்றும் எஸ்டிஆர்எஃப் வீரர்கள் சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் சுமார் 40 பயணிகள் இருந்ததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,

“அல்மோரா மாவட்டத்தின் மார்ச்சுலாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான பேருந்து விபத்தில் பயணிகளின் உயிரிழப்புகள் பற்றிய மிகவும் வருத்தமான செய்தி கிடைத்தது. நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் எக்ஸ் தளத்தில் கூறினார்.

“உள்ளூர் நிர்வாகம் மற்றும் SDRF குழுக்கள் காயமடைந்தவர்களை வெளியேற்றி, அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல விரைவாக செயல்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால், பலத்த காயமடைந்த பயணிகளை விமானத்தில் ஏற்றிச் செல்லவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

The post உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: