×
Saravana Stores

30 நிமிடத்திற்குள் சீக்கிய யாத்ரீகர்களுக்கு இலவச ஆன்லைன் விசா: பாகிஸ்தான் அறிவிப்பு

சண்டிகர்: பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொசின் நக்வி, லாகூரில் 44 பேர் கொண்ட சீக்கிய யாத்ரீகர்கள் அடங்கிய வெளிநாட்டு குழுவை சந்தித்து பேசினார். அப்போது அவர், ‘‘பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனித தலங்களில் வழிபட அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் இருந்து வரும் சீக்கிய யாத்ரீகர்கள், பாகிஸ்தான் வந்த 30 நிமிடத்திற்குள் இலவச ஆன்லைன் விசா பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தற்போது பாகிஸ்தான் வரும் 1 லட்சம் சீக்கிய யாத்ரீகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கிறோம். சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு 10 முறை வந்தாலும் அவர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம். அவர்களின் எந்த புனித தலத்திற்கும் எந்த அனுமதியும் பெற தேவையில்லை’’ என்றார். இதனை வட அமெரிக்க பஞ்சாபி சங்கத்தின் நிர்வாக இயக்குநர் சத்னம் சிங் வரவேற்றுள்ளார். மேலும், வாகா வழியாக இந்தியா, பாகிஸ்தான் எல்லை தாண்டிய வர்த்தகத்தை மீண்டும் தொடங்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

The post 30 நிமிடத்திற்குள் சீக்கிய யாத்ரீகர்களுக்கு இலவச ஆன்லைன் விசா: பாகிஸ்தான் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pakistan ,CHANDIGARH ,MINISTER ,MOSIN NAQVI MET ,LAHORE ,United States ,UK ,Canada ,
× RELATED பாக். எல்லை அருகே சீன டிரோன் கண்டெடுப்பு