சேலம்: மேட்டூர் அணைக்கு நீரவரத்து வினாடிக்கு 7,325 கனஅடியில் இருந்து 6,712 கன அடியாக சரிந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.50 அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கன அடியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.