பிரபல பொருளாதார நிபுணர் பிபேக் டெப்ராய் காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: பிரபல பொருளாதார நிபுணரும் பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகருமான பிபேக் டெப்ராய் நேற்று காலமானார்.  பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகராக இருந்தவர் பிபேக் டெப்ராய் ( 69).குடல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிபேக் டெப்ராய் ஒரு உயர்ந்த அறிஞர். பொருளாதாரம், வரலாறு, கலாச்சாரம், அரசியல், ஆன்மீகம் போன்ற பல்வேறு துறைகளில் நிபுணர். தனது எழுத்துக்கள் மூலம் அவர் இந்தியாவின் அறிவுசார் காட்சிகளில் நீங்காத முத்திரை பதித்துள்ளார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். என பதிவிட்டுள்ளார்.அவரது மறைவுக்கு, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post பிரபல பொருளாதார நிபுணர் பிபேக் டெப்ராய் காலமானார்: பிரதமர் மோடி இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: