நார்த்சவுன்ட்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி நேற்றிரவு 11.30 மணிக்கு தொடங்கி நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இங்கிலாந்து 45.1ஓவரில் 209 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.
வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சில் குடாகேஷ் மோதி 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் இழப்பின்றி 81 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பின்னர் டக்வெர்த் லீவிஸ் விதிப்படி 35 ஓவரில் 157 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 25.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 157 ரன் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக தீபாவளி சரவெடிபோல் பேட்டிங்கில் வெளுத்துவாங்கிய எவின் லூயிஸ் 94 ரன் (69 பந்து, 5 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசினார். 4 விக்கெட் வீழ்த்திய குடாகேஷ் மோதி ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது போட்டி நாளை நடக்கிறது.
The post இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி appeared first on Dinakaran.