வர்த்தகத்துறை தடை பட்டியலில் 40 நிறுவனங்கள் உள்ளன என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசன்ட் ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம் மார்ச் 2023 முதல் மார்ச் 2024க்கு இடையில் ரஷ்யாவை தலமாக கொண்ட நிறுவனங்களுக்கு 700 ஏற்றுமதி தொகுப்புகள் அனுப்பியதாகவும் அதில் அமெரிக்க தயாரிப்பு விமான பாகங்கள் மற்றும் மைக்ரோ சிப்கள் உள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் விவேக் குமார் மிஸ்ரா, சூதர் குமார் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2023 முதல் 2024 வரை ரஷ்யாவை தலமாக கொண்ட நிறுவனத்திற்கு அமெரிக்க விமான உதிரி பாகங்கள் போன்ற மூன்று லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அதிமுக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை வழங்கியதாக இந்தியாவை தலமாக கொண்ட மாஸ் டிரான்ஸ் நிறுவனம் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. டிஎஸ்எம்டி குளோபல் பிரைவேட் லிமிட்டெட் என்ற இந்தியாவை தலமாக கொண்ட நிறுவனம், ரஷ்யாவை தளமாக கொண்ட நிறுவனங்களுக்கு 4 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள அதிமுக்கிய பொருட்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த 19 இந்திய நிறுவனங்களுக்கும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. சீனா, மலேசியா, தாய்லாந்து, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் நிறுவனங்களுக்கும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
The post 19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை: ரஷ்யாவின் போர் முயற்சிக்கு உதவியதாகக் கூறி நடவடிக்கை appeared first on Dinakaran.