கர்நாடக மாநில உதய தினத்தை முன்னிட்டு சாதனையாளர்களுக்கு ராஜ்யோற்சவ விருது

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உதயமாகியதின் 69வது ஆண்டு விழா மாநிலம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. பெங்களூருவில் மாநில அரசின் சார்பில் நடக்கும் விழாவில் முன்னாள் முதல்வர் எம்.வீரப்ப மொய்லி, முன்னாள் அமைச்சர் பி.டி.லலிதா நாயக் உள்பட 69 பேருக்கு விருது வழங்கி கவரவித்தனர்.

நாடு சுதந்திரம் பெற்றபின் குறிப்பிட்ட மொழியினர் வாழும் பகுதியை தனிமாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதையேற்று மொழிவழி மாநிலம் உருவாக்க தனி ஆணையத்தை ஒன்றிய அரசு அமைத்தது. அந்த ஆணையம் கொடுத்த அறிக்கை அடிப்படையில் கடந்த 1956 நவம்பர் 1ம் தேதி மொழிவழி மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது தற்போதைய கர்நாடக மாநிலத்தை மைசூரு மாகாணம் என்று ஒன்றிய அரசு பிரகடனம் செய்தது.

இந்நிலையில் தேவராஜ் அரஸ் மைசூரு மாகாண முதல்வராக இருந்தபோது, மாநிலத்தின் பெயரை கர்நாடக மாநிலம் என்று மாற்றம் செய்யும் தீ்ர்மானம் பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றியதுடன் அதற்கு ஒப்புதல் வழங்ககோரி ஒன்றிய அரசுக்கு அனுப்பினர். மாநில அரசின் தீர்மானத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது.

அதை தொடர்ந்து கடந்த 1973 நவம்பர் 1ம் தேதி கர்நாடக மாநிலம் என்று அதிகாரபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்டதின் பொன்விழாவை ஓராண்டு காலம் கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி கடந்தாண்டு நவம்பர் 1ம் தேதி முதல் கடந்த ஓராண்டு காலம் மாநிலம் முழுவதும் மாவட்ட, தாலுகா தலைநகரங்களில் பல்வேறு பண்பாடு, காலச்சாரங்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இன்று 69வது கர்நாடக மாநில உதிய தினமும் 50வது பொன்விழாவும் கொண்டாடப்பட்டது. மாநில அரசின் கல்வி துறை சார்பில் பெங்களூரு கண்டீரவா உள் விளையாட்டு அரங்கில் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கும் விழாவில் முதல்வர் சித்தராமையா, கல்வியமைச்சர் மதுபங்காரப்பா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பெங்களூரு விதானசவுதாவில் மாநில அரசின் கன்னட வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை சார்பில் மாலை 4.30 மணிக்கு நடக்கும் விழாவில் பல துறைகளில் சாதனைப்படைத்த 69 பேருக்கு ராஜ்யோற்சவ தின விருது வழங்கப்படுகிறது. அமைச்சர் சிவராஜ் தங்கடகி தலைமையில் நடக்கும் விழாவில் முதல்வர் சித்தராமையா விருது வழங்கி கவரவிக்கிறார்.

பெங்களூருவில் நடக்கும் விழாவில் முதல்வர் சித்தராமையா கலந்து கொள்வதை போல், 30 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் விழாவில் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் பங்கேற்று தேசியகொடி ஏற்றி வைத்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பதுடன் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் தொடங்கி வைக்கிறார்கள்.

மேலும் 224 சட்டபேரவை தொகுதியிலும் நடக்கும் விழாவில் தொகுதி பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். அரசு விழாவாக மட்டுமில்லாமல் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பிலும் மாநில உதய தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் கன்னடமொழி வளர்ச்சிக்காக சேவை செய்த மாகான்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், ஞானபீட விருது பெற்ற இலக்கியவாதிகள் ஆகியோர் கவுரவிக்கப்படுகிறார்கள்.

வீரப்பமொய்லி உள்பட 69 பேருக்கு ராஜ்யோற்சவ விருது: மாநில அரசின் கன்னட வளர்ச்சி மற்றும் பண்பாட்டுதுறை சார்பில் இன்று மாலை 4.30 மணிக்கு விதானசவுதா வளாகத்தில் நடக்கும் விழாவில் பல்வேறு துறைகளின் சாதனைப்படைத்த 69 பேருக்கு ராஜ்யோத்சவ விருது வழங்கி கவரவிக்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் ரொக்க பணம் மற்றும் 25 கிராம் தங்க நாணயம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகிறது.

இலக்கிய துறையில் முன்னாள் முதல்வர் எம்.வீரப்பமொய்லி, முன்னாள் பி.டி.லலிதாநாயக் ஆகியோருக்கும் நீதித்துறையில் வக்கீல் எஸ்.பாலன், சிற்பகலை துறையில் மைசூருவை சேர்ந்த அருண்யோகிராஜ், நாட்டுபுற கலை பிரிவில் பிச்சஹள்ளி சீனிவாஸ் உள்பட பலர் விருது பெறுகிறார்கள்.

விருது பெறுவோர் விவரம் நாட்டுப்புற கலை பிரிவில்: இமாமசாப் எம்.வல்லபவனவர், அஷ்வநாராயணா, குமாரய்யா, வீரபத்ரய்யா, நரசிம்மலு, பசவராஜ் சங்கப்பா பரிவாள, எஸ்.ஜி.லட்சுமி தேவம்மா, பிச்சஹள்ளி சீனிவாஸ், லோகய்யாஷெரா. சிற்பகலை பிரிவில்:- அருண்யோகிராஜ், பசவராஜ் படிகேர், வெள்ளத்திரை/சின்னத்திரை:- ஹேமாசவுத்திரி, எம்.எஸ்.நரசிம்மமூர்த்தி. சங்கீதம்:- பி.ராஜகோபால், ஏ.என்.சதாசிவப்பா. நாட்டியம்:- விதுஷி லலிதாராவ். நிர்வாகம்:- ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகார எஸ்.வி.ரங்கநாத்.

மருத்துவம்:- டாக்டர். ஜெ.பி.பிடினஹாள, டாக்டர் மைசூரு சத்யநாராயணா, டாக்டர் லட்சுமண் அனுமந்தப்பா பிதரி. சமூக சேவை:- வீரசங்கய்யா. ஹீராசந்த் வாக்மோரே, மல்லம்மா சூலகத்தி, தீலிப்குமார். தொலைதொடர்பு:- ஹுலிகல் நாகராஜ், டாக்டர் எச்.ஆர்.சாமி, பிரகலத்ராவ், அஜித்குமார் ரெய், இர்பான் ரசாக் விருபாட்ச ராமந்திரப்பா ஹாவனூர். வெளிநாடு/வெளிமாநிலம்:- கன்னய்யாநாயுடு (ஆந்திரா), டாக்டர் தும்பே மோஹிதீன் (லண்டன்), சந்திரசேகர் நாயக் (அமெரிக்கா). சுற்றுச்சூழல்:- டாக்டர் ஆல்மித்ரிா படேல்.

கைவினை:- சந்திரசேகர் சிரிவந்தே. வேளாண்:- சிவனபுரா வெங்கடேஷ், புட்டேரம்மா. மீடியா:- என்.எஸ்.சங்கர், சனத்குமார் பிளகலி, ஏ.ஜி.கராடகி, ராமகிருஷ்ணபடகேஷி. அறிவியல் தொழில்நுட்பம்:- பேராசிரியர் டி.வி.இராமசந்திரா, சுப்பய்யா அருணன். கூட்டுறவு:- விருபாட்சப்பா நெகார. யக்‌ஷகானா:- கேசவ் ஹெக்டே கூளகி, சீதாராமா தோல்பாடி. ஒயிலாட்டம்:- சித்தப்பா கரியப்பாகுரி, நாராயணப்பா ஷிள்யகேதா. நாடகம்:- சரஸ்வதி ஜெயலைகா பேகம், ஓலேகர், பாக்யாஸ்ரீரவி, டி.ராமு, ஜனார்தன், அனுமனதாச பவர்.

இலக்கியம்: முன்னாள் முதல்வர் எம்.வீரப்பமொய்லி, முன்னாள் அமைச்சர் பி.டி.லலிதாநாயக், அல்லம்மாபிரபு பெட்டதூர், அனுமந்தராவ் தொட்டமனி, பாளாசாஹப் லோகாபுரா, பைரமங்கல ராமேகவுடா, டாக்டர் பிரசாந்த் மாட்தா. கல்வி:- டாக்டர் வி.கமலம்மா, டாக்டர். ராஜேந்திரஷெட்டி, டாக்டர் பத்மாசேகர். விளையாட்டு:- ஜூட் பீலிக்ஸ் செபாஸ்டின், கவுரத் வர்மா, ஆர்.உமாதேவி. நீதித்துறை:- தங்கவயல் வக்கீல் எஸ்.பாலன். ஓவியம்:- பிரபு ஹரசூர். இது தவிர பொ்னவிழா கர்நாடகம் முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த தலா 50 ஆண், பெண் சாதனையாளர்களுக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

The post கர்நாடக மாநில உதய தினத்தை முன்னிட்டு சாதனையாளர்களுக்கு ராஜ்யோற்சவ விருது appeared first on Dinakaran.

Related Stories: