சென்னை: தீபாவளி முடிந்த நிலையில் மக்கள் சொந்த ஊர் திரும்ப நாளைமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்பட உள்ளது. நவம்பர். 2 முதல் 4 ஆம் தேதி வரை வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. 3 நாட்களுக்கு மொத்தம் 12,848 பேருந்துகள் பல நகரங்களில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 2,692 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்ப 1.50 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
The post நாளைமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அறிவிப்பு appeared first on Dinakaran.