திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் விநியோக வாய்ப்பு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலுமிருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு சுவையான மற்றும் சுத்தமான அன்னப்பிரசாதத்தை வழங்கும் ஒரு நாள் நன்கொடை திட்டத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின்ஸ்ரீ வெங்கடேஸ்வரா நித்ய அன்னப்பிரசாதம் அறக்கட்டளை தொடங்கியுள்ளது. தற்போது இந்த அன்னபிரசாத விநியோகத்திற்காக நன்கொடைகள் ஒரு நாள் முழுவதும் அன்னபிரசாதம் வழங்க ரூ.44 லட்சம் செலுத்த வேண்டும்.

அதேபோல், நன்கொடையாளர்கள் காலை உணவுக்கு ரூ.10 லட்சமும், மதிய உணவுக்கு ரூ.17 லட்சமும், இரவு உணவிற்கு ரூ.17 லட்சமும் வழங்கி பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கலாம். நன்கொடையாளரின் பெயர் வெங்கமாம்பா அன்னப்பிரசாத கட்டிடத்தில் காட்சிக்கு டிஸ்ப்ளே செய்யப்படும். அதேபோல், நன்கொடையாளர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு நாள் இங்கு அன்னப்பிரசாதம் பக்தர்களுக்கு பரிமாறும் வாய்ப்பைப் பெறலாம். திருமலை மட்டுமின்றி திருப்பதி பகுதிகளில் தற்போது அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது.

அவ்வாது திருமலையில் உள்ள மாத்ரு தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத வளாகம், வைகுண்டம் கியூ வளாகம்-1, 2ல் உள்ள அறைகள், வெளியே உள்ள தரிசன வரிசைகள், பிஏசி-4 (பழைய அன்னபிரசாதம்), பிஏசி-2, திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில், சீனிவாசம், விஷ்ணுநிவாசம் காம்பளக்ஸ், ரூயா மருத்துவமனை, சுவிம்ஸ், மகப்பேறு மருத்துவமனை, பர்டு, எஸ்.வி.ஆயுர்வேதா மருத்துவமனை, திருச்சானூரில் உள்ள அன்னபிரசாத பவனில் பக்தர்களுக்கு இலவச அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது.

திருமலையில் உள்ள உணவுக் கூடங்களில் அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. வைகுந்தம் கியூகாம்ப்ளக்ஸ்-1, 2ல் உள்ள அறைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு வளாகம், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன வளாகம், கல்யாணகட்டா பகுதியில் டீ, காபி, குழந்தைகளுக்கான பால் வழங்கப்படுகிறது. எனவே பக்தர்கள் ஒரு நாள் அன்னப்பிரசாத சேவையில் நன்கொடை அளித்து சுவாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கும் சேவையில் பங்கேற்று ஏழுமலையானின் அருள் பெறும்படி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் விநியோக வாய்ப்பு: தேவஸ்தானம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: