டயர் பஞ்சரானதால் பறந்து வீட்டின் மீது விழுந்த கார்: தாய், மகன் உயிர் தப்பினர்

ஊட்டி: டயர் பஞ்சரானதால் பைக் மீது மோதி பறந்துபோய் வீட்டின் மீது கார் விழுந்தது. இந்த விபத்தில் தாய், மகன் உயிர் தப்பினர்.  பெங்களூருவில் பணிபுரிந்து வரும் குன்னூரை சேர்ந்த இளைஞர், தனது தாயுடன் தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக காரில் நேற்று காலை புறப்பட்டு ஊட்டி வந்து கொண்டிருந்தார். பிங்கர்போஸ்ட் பகுதியில் வந்தபோது காரின் முன் சக்கர டயர் ஒன்று திடீரென பஞ்சரானது.

இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்றிருந்த பைக் மீது மோதி கீழ்புறமுள்ள வீட்டின் கூரை மீது பாய்ந்து சென்று விழுந்தது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து, காரில் இருந்த தாய், மகனை பத்திரமாக மீட்டனர். இருவரும் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரை கிரேன் மூலம் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post டயர் பஞ்சரானதால் பறந்து வீட்டின் மீது விழுந்த கார்: தாய், மகன் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: