38 மாவட்டங்களில் 25 வகையான விளையாட்டு போட்டிகளை நடத்த ரூ.12.50 கோடி ஒதுக்கி அரசாணை

சென்னை : பள்ளிக்கல்வித் துறை கீழ் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளை பல்வேறு நிலைகளில் ஊக்கப்படுத்தும் விதத்தில் 2024-25ம் கல்வியாண்டில் குறுவட்டம், கல்வி மாவட்டம், மண்டலம், மாநில மற்றும் தேசிய அளவில் 38 மாவட்டங்களில் 25 வகையான விளையாட்டு போட்டிகள் மற்றும் அனைத்து வட்டாரம், வருவாய் மாவட்டம், மாநில அளவில் சதுரங்க விளையாட்டுப் போட்டியையும் ஒருங்கிணைத்து நடத்திட பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுமதி அளித்தும் இதற்கென ரூ.12.50 கோடி ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிடுகிறது.

மேலும் 2024-25ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்து மேற்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட செலவின விவரங்கள், மீதமுள்ள தொகை, செலவினத்திற்கான பயனீட்டு சான்று, விரிவான கணக்கீட்டுதாள் மற்றும் உள்ளாட்சி துறையின் தணிக்கை அறிக்கை போன்ற அனைத்தும் உள்ளடக்கிய முழு விவரங்களுடன் அரசுக்கு கருத்துருவை சமர்ப்பிக்குமாறும் பள்ளிக்கல்வி இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

The post 38 மாவட்டங்களில் 25 வகையான விளையாட்டு போட்டிகளை நடத்த ரூ.12.50 கோடி ஒதுக்கி அரசாணை appeared first on Dinakaran.

Related Stories: