இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சி.முனியப்பராஜ் ஆஜராகி, புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 4000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டார். இருவரையும் ஜாமீனில் விடுவிக்க கூடாது என்றார். பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி, பொது மக்களின் பணம் 600 கோடி ரூபாய் தொடர்புடைய மோசடி.
தேவநாதன் நிதி நிறுவனத்தின் இயக்குனர் ஆவதற்கு முன் நிதிநிலைமை சீராக இருந்தது. ஆனால் அவர் இயக்குனரான பின் மோசமாகிவிட்டது. பொருளாதார குற்றங்களை தீவிரமாக கருத வேண்டும் என்றார். அனைத்து தரப்பு வாதங்களுக்கு கேட்ட நீதிபதி, மனுதாரர் தேவநாதன் மற்றும் இயக்குனர் குணசீலன் ஆகியோர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு தேவநாதனின் ஜாமீன் மனு ஐகோர்ட்டில் மீண்டும் தள்ளுபடி appeared first on Dinakaran.