- எம்.ஜி.ஆர்
- விஜய்
- சென்னை
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை ராயப்பேட்டை
- அண்ணா யூனியன்
- வேஜப்பாடி பதிலியாட்டி
- தின மலர்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று, அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த மற்றும் மரணமடைந்தோர் குடும்பங்கள் உள்ளிட்ட 167 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 1.67 கோடி நிதியுதவி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது.
அந்த கொள்கையின் அடிப்படையில் நடிகர் விஜய் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதில்போய் இது சரியா, அது சரியா என்று நாம் சொல்ல முடியாது. கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்படும். அதிமுக கட்சி பற்றி விஜய் தனது மாநாட்டில் விமர்சிக்கவில்லை. கொள்கையில் இருந்து அதிமுக எப்போதும் மாறாது. விஜய் மட்டுமல்ல, யாராலும் அதிமுக வாக்கை பிரிக்க முடியாது. எம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் கட்சி நடத்த முடியும் என்ற நிலை தமிழகத்தில் இருக்கிறது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை, பிரிந்து போனவர்கள் என்று நீங்கள்தான் (ஊடகம்) சொல்கிறீர்கள். கட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால், அதிமுக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டு அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் நீக்கப்பட்டவர்கள் அவர்கள். இனி பிரிந்து போனார்கள் என்ன சொல்லை பயன்படுத்த வேண்டாம்.இவ்வாறு அவர் பேசினார்.
The post எம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் கட்சி நடத்த முடியும் என்ற நிலை உள்ளது: அதிமுக வாக்கை யாரும் பிரிக்க முடியாது: விஜய்க்கு எடப்பாடி பதிலடி appeared first on Dinakaran.