தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கு 20% போனஸ்

சென்னை: தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக பணியாளர்கள் 10% போனஸ் மட்டுமே பெற தகுதியானவர்கள். சுற்றுசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு ரப்பர் கழகம் மற்றும் தமிழ்நாடு வனத்தோட்ட கழக பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படுகிறது.

வனத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவன பணியாளர்களுக்கும் ஒரே அளவில் 20% போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக பணியாளர்களுக்கும் ரூ. 5.72 கோடி செலவில் 20% போனஸ் வழங்கப்படும். இதனால் 3939 பணியாளர்கள் பயன் பெறுவார்கள் என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கு 20% போனஸ் appeared first on Dinakaran.

Related Stories: