2026ம் ஆண்டுக்குள் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அமைச்சர் டிஆர்பி.ராஜா பேச்சு

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழிற்பூங்காவில் தொழில் முனைவோர் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க 10 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகளை முதல்வர் தமிழகத்துக்கு கொண்டு வந்து குவித்துள்ளார். 2026க்குள் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு தொழில்துறை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பேசினார்

தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணி அருகே ரூ. 1,200 கோடியில் 10 ஏக்கர் பரப்பளவில் 2 கட்டமாக டைடல் பூங்கா அமைய உள்ள இடத்தை, அமைச்சர் டிஆர்பி.ராஜா நேற்று பார்வையிட்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, 2025 இறுதிக்குள் பணிகள் முடியும். 2026ல் செயல்பாட்டுக்கு வரும்.’’ என்றார்.

The post 2026ம் ஆண்டுக்குள் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அமைச்சர் டிஆர்பி.ராஜா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: