×

தேசிய அளவில் இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கும் போது காங்கிரசுக்கு வேறு எந்த கட்சிகளுடனும் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டில்லி பாபு ஏற்பாட்டில், திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த அமமுக பகுதிச் செயலாளர் கரீம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், தமிழ்நாடு காங்கிரஸ் துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், வாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.  அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டியளிக்கையில் கூறியதாவது: அகில இந்திய காங்கிரஸ் தலைமை தெளிவாக உள்ளது. ஒன்றிய அளவில் இந்தியா கூட்டணி மிக வலிமையான கூட்டணியாக இருக்கும் நிலையில் நாங்கள் பிற கூட்டணி கட்சிகளை நாட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post தேசிய அளவில் இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கும் போது காங்கிரசுக்கு வேறு எந்த கட்சிகளுடனும் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Tags :
× RELATED மறைந்த தலைவர்கள் மன்மோகன்சிங்,...