பெரம்பலூர், அக்.29: பாலிசி போனசை உயர்த்தி தர வலியுறுத்தி பெரம்பலூரில் எல்ஐசி முகவர் சங்கம் சார்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஆல் இந்தியா லைஃப் இன்சூரன்ஸ் ஏஜென்ட்ஸ் ஃபெடரேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தென் மண்டல ஆலோசனையின் படி, பெரம்பலூர் வெங்கடேச புரத்தில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பாக எல்ஐசி முகவர் சங்கம் சார்பாக, நேற்று (28 ஆம் தேதி) திங்கட்கிழமை தர்ணா போராட்டம் நடை பெற்றது.பாலிசி போனசை உயர்த்தி வழங்க வேண்டும், ஜிஎஸ்டியை நீக்க வேண்டும்,
பாலிசியின் கடனுக்கான வட்டியை குறைத்திட வேண்டும், ரூபாய் ஒரு லட்சம் காப்பீட்டை தொடர்ந்திட வேண்டும், காப்பீட்டு தகுதிக்கான அதிகபட்ச வயதை உயர்த்தவேண்டும், முதல் வருட கமிஷனை குறைக்க கூடாது என்பன உள்ளிட்ட எல்ஐசி முகவர்களுக்கான கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி அறவழிப் போராட்டமாக தர்ணா போராட்டம் நடை பெற்றது. இந்தப் போராட்டத்திற்கு எல்ஐசி முகவர் சங்கத்தின் தலைவர் சுத்தாங்காத்து தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் தஞ்சை கோட்ட இணைச் செயலாளர் முருகானந்தம், நல்லதுரை, சசிகுமார், ஆசைத்தம்பி, ரவிச் சந்திரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
The post போனசை உயர்த்தி தரக்கோரி எல்ஐசி முகவர் சங்கம் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.