ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் புதுவை பாஜக எம்.பி. செல்வகணபதியிடம் நேரில் சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்..!!

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் புதுவை பாஜக எம்.பி. செல்வகணபதியிடம் நேரில் சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பணத்தை கொண்டு சென்ற 3 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என அவர்கள் கைது செய்த நபர்கள் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து பாஜக நிர்வாகிகளுக்கு தொடர்ச்சியாக சம்மன் அனுப்பி தீவிரமாக விசாரணை மேற்கொள்ளும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

விசாரணையின் அடிப்படையில் ஹவாலா பணம் என்பதை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்துள்ள நிலையில் ஹவாலா பிரோக்கர்கள் மற்றும் பாஜக மாநில புதுவை எம்.பி செல்வகணபதிக்கும் கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில் இரண்டு ஹவாலா பிரோக்கர்கள் சம்மனின் அடிப்படையில் ஆஜரான நிலையில் செல்வகணபதி 2 மாதத்திற்கு கால அவகாசம் கேட்டிருந்தார் குறிப்பாக அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பதால் 2 மாதத்திற்கு கால அவகாசம் வழங்குமாறு சிபிசிஐடி போலீசாருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இந்த நிலையில் தற்போது சிபிசிஐடி போலீசார் அவரிடம் நேரில் சென்று விசாரணை செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பதால் அவரால் வரமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதால் நேரில் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்வகணபதி என்பவர் ஹவாலா பிரோக்கர்களிடம் தங்க கட்டிகளை கொடுத்து பணம் கைமாற்றி இருப்பதாகவும் அதன் அடிப்படையில் செல்வகணபதியிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தியதின் அடிப்படையில் இதற்கு பின்னால் யார் உள்ளனர் எவ்வளவு பணம் கைமாறி உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் புதுவை பாஜக எம்.பி. செல்வகணபதியிடம் நேரில் சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: