இந்தியா – சீனா படைகள் வாபஸ்; நம்பிக்கையை மீட்டெடுக்க சிறிது காலம் தேவை: வௌியுறவு அமைச்சர் தகவல்

புதுடெல்லி: இந்தியா – சீனா இடையே நம்பிக்கையை மீட்டெடுக்க சிறிது காலம் தேவை என்று வௌியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். இந்தியா – சீன எல்லை பிரச்னையின் முக்கிய மைல் கல்லாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் வீரர்கள் பரஸ்பர ரோந்து ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஆனாலும், இரு தரப்பிலும் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப சிறிது காலம் எடுக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புனேயில் நடந்த நிகழ்ச்சியில் ஜெயசங்கர் பேசுகையில், ‘இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைக்க இன்னும் சில கால அவகாசம் தேவைப்படும். இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர பேச்சுவார்த்தை காரணமாக, தற்போதைய ஒப்பந்தம் சாத்தியமானது. எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.

சமீபத்திய ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்தியா-சீனா இடையிலான உறவுகள், மிக விரைவில் சுமூகமாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் நாம் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். அவர்களும் அட்ஜஸ்ட் ஆக வேண்டும். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக பதற்றம் தொடர்கிறது. இயல்பு நிலை உருவாக சிறிது காலம் பிடிக்கலாம். ஒன்றாகச் செயல்பட வேண்டுமானால், ஒருவரை ஒருவர் நம்ப வேண்டும்’ என்று கூறினார்.

The post இந்தியா – சீனா படைகள் வாபஸ்; நம்பிக்கையை மீட்டெடுக்க சிறிது காலம் தேவை: வௌியுறவு அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: