வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 30 பேர் உயிரிழப்பு: 5 கட்டடங்கள் இடிந்து தரைமட்டம்

காசா: வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். குடியிருப்புப் பகுதி அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 5 கட்டடங்கள் இடிந்தன. தாக்குதலுக்குள்ளான இடத்தில் மீட்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் உள்ளூர் மக்கள் கழுதைகள் மூலம் உடல்களைக் கொண்டுவந்தனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினரின் ஆதரவு பெற்ற பாலஸ்தீனர்களுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதில் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் படையினரை அழிக்கும் நோக்கத்தில் காசா எல்லைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே வடக்கு காஸாவில் உள்ள பெயிட் லாஹியா பகுதியில் இஸ்ரேல் நேற்று நள்ளிரவு வான்வழித்தாக்குதல் நடத்தியது. இதில், குழந்தைகள், பெண்கள் உள்பட 30 பேர் உயிரிழந்ததாக அந்நநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், குடியிருப்பு அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 5 கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகள் நேரிட்ட பகுதிக்கு மீட்புப் படையினர் செல்ல முடியவில்லை என்றும், இதனால் கழுதைகள் மற்றும் வண்டிகள் மூலம் உடல்களை அப்பகுதியினரே மீட்டு வருவதாகவும் வாஃபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஓராண்டுக்கும் மேலாக நீடித்துவரும் இப்போரில், இதுவரை காஸாவில் 42,847 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100,544 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேபோன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,139 பேர் உயிரிழந்தனர். 200 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

The post வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 30 பேர் உயிரிழப்பு: 5 கட்டடங்கள் இடிந்து தரைமட்டம் appeared first on Dinakaran.

Related Stories: