அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்பு தொகுப்பு நாளை முதல் விற்பனை: மளிகை பொருட்கள் தொகுப்பு ரூ.199, ரூ.299; அதிரசம்-முறுக்கு காம்போ ரூ.190; அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் ‘கூட்டுறவு கொண்டாட்டம்’ என்ற பெயரில் மளிகைப்பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை வருகிற 28ம் தேதி (திங்கட்கிழமை) முதல் நடைபெற உள்ளது.

பிரீமியம் மற்றும் எலைட் என 2வகையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பிரீமியம் தொகுப்பில் துவரம்பருப்பு-200கிராம், உளுத்தம் பருப்பு-200 கிராம், கடலை பருப்பு-200 கிராம், வறுகடலை (குண்டு) -100 கிராம், மிளகு-25 கிராம், சீரகம்-25 கிராம், வெந்தயம்-50 கிராம், கடுகு-50 கிராம், சோம்பு-50 கிராம், நீட்டு மிளகாய்-100 கிராம், தனியா-100 கிராம், புளி-100 கிராம், ரவை-100 கிராம், ஏலக்காய்-5 கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.199 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும், எலைட் தொகுப்பில் துவரம் பருப்பு-250 கிராம், உளுத்தம் பருப்பு-250 கிராம், கடலை பருப்பு-250 கிராம், வறுகடலை (குண்டு)-200 கிராம், மிளகு-50 கிராம், சீரகம்-50கிராம், வெந்தயம்-50 கிராம், கடுகு-50கிராம், சோம்பு-50 கிராம், நீட்டு மிளகாய்-250 கிராம், தனியா-200 கிராம், புளி-100 கிராம், ரவை-100 கிராம், ஏலக்காய்-5 கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.299 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையில் “அதிரசம்-முறுக்கு காம்போ” என்ற விற்பனை தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பச்சரிசி மாவு-500 கிராம், பாகு வெல்லம்-500 கிராம், ஏலக்காய்-5 கிராம், மைதா மாவு-500 கிராம், சன்பிளவர் ஆயில் -1/2லிட்டர் என 5 வகையான பொருட்கள் அடங்கியுள்ளது. விலை ரூ.190.

The post அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்பு தொகுப்பு நாளை முதல் விற்பனை: மளிகை பொருட்கள் தொகுப்பு ரூ.199, ரூ.299; அதிரசம்-முறுக்கு காம்போ ரூ.190; அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: