வெள்ளியங்கிரியில் பக்தர்கள் மலையேற அரசு ரூ.5,099 கட்டணம் விதித்ததாக செய்தி வதந்தி தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம்

சென்னை: வெள்ளியங்கிரியில் பக்தர்கள் மலையேற அரசு ரூ.5,099 கட்டணம் விதித்ததாக வெளியான செய்தி வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் வெளியான அறிக்கையில்;

“தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகளில் மலையேற்றம் செய்ய வனத்துறை சார்பில் “டிரெக் தமிழ்நாடு” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் மலையேற்றம் செய்ய ரூ.5,099 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், காப்பீடு, வழிகாட்டி வசதி, இருவேளை உணவு, இருவேளை ஸ்னாக்ஸ், 13 கிமீ வாகனப் பயணம், துணி பேக், தொப்பி, பேனா, பறவைகள் பேம்பிளட் போன்றவை அடங்கும்.

இது முழுக்க முழுக்க டிரெக்கிங் சேவை மட்டுமே. ஆன்மீகப் பயணம் இல்லை. கோயிலுக்கு முன்பே இந்த பயணம் முடிந்துவிடும். பக்தர்கள் மலையேற்றம் செல்லும் மாதங்களில் இந்த டிரெக்கிங் சேவை வழங்கப்படாது. மலையேற்றம் செய்யும் பக்தர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெள்ளியங்கிரியில் பக்தர்கள் மலையேற அரசு ரூ.5,099 கட்டணம் விதித்ததாக செய்தி வதந்தி தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் appeared first on Dinakaran.

Related Stories: