ஊத்தங்கால் குவாரியை மூடக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் புகார் மனு

 

பெரம்பலூர், அக். 26: பாடாலூர் ஊராட்சி ஊத்தங்கால் குவாரியை மூடக் கோரி கிராமப் பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுக்கா பாடாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்ப தாவது :
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்தங்கல் கிராமத்தில் கல்குவாரி உள்ளது.

அந்த குவாரி வரைமுறைக்கு அப்பாற் பட்டு இயங்கி வருகிறது. இதனால் வெடி வைக்கும் போது கற்கள் தெரித்து வந்து கிராமத்தில் உள்ள தெருக்களில்விழுகின்றன. அதுமட்டுமன்றி வீடுகளில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளன. பாதுகாப்பு இல்லாத நிலையில் இயங்கி வரும் குவாரியில் இப்பகுதி மக்கள் தவறி விழுந்து இறந்துள்ளனர். சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு ஊத்தங்கால் கிராமத்தில் இயங்கி வரும் கல் குவாரியை உடனடியாக மூட வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post ஊத்தங்கால் குவாரியை மூடக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் புகார் மனு appeared first on Dinakaran.

Related Stories: