பசும்பொன்னில் குருபூஜை தேவர் சிலைக்கு தங்கக்கவசம்

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் நினைவாலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அக். 30ல் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெறும். இந்த ஆண்டு 62வது குருபூஜை மற்றும் 117வது ஜெயந்தி விழா நடக்கிறது.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014ல் தேவர் நினைவாலயத்தில் உள்ள தேவர் சிலைக்கு ரூ.4.5 கோடி மதிப்பிலான 13 கிலோ தங்கக்கவசத்தை அதிமுக சார்பில் வழங்கினார்.

மதுரை அண்ணா நகர் வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்கப்படும் தங்கக்கவசம், ஆண்டுதோறும் எடுக்கப்பட்டு, தேவர் ஜெயந்தியின்போது பசும்பொன்னில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்கப்படும். விழா முடிந்ததும் மீண்டும் லாக்கரில் வைக்கப்படும். நேற்று பிற்பகல் மதுரை அண்ணாநகர் வங்கி லாக்கரில் இருந்து அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள், தங்கக்கவசத்தை பெற்று, தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைத்தனர்.

அங்கிருந்து வாகனத்தில் போலீசார் பாதுகாப்புடன் தங்கக்கவசம் பசும்பொன்னிற்கு எடுத்து வரப்பட்டது. அங்கு தேவர் சிலைக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. தங்க கவசத்திற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post பசும்பொன்னில் குருபூஜை தேவர் சிலைக்கு தங்கக்கவசம் appeared first on Dinakaran.

Related Stories: