அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வாரத்தில் அதிகபட்சமாக 3 அல்லது 4 நாட்கள் மட்டும் தான் வேலை கிடைக்கிறது. அதைக் கொண்டுதான் அவர்கள் வாரம் முழுவதும் வாழ்க்கை நடத்த வேண்டும். அதற்கே அவர்களுக்கு வருமானம் போதாது எனும் நிலையில், பண்டிகைக்கு புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வாங்குவதென்பது சாத்தியமற்ற ஒன்று. எந்த ஆதரவும் இல்லாத அவர்களுக்கு தமிழக அரசு தான் துணையாக இருக்க வேண்டும்.

புதுவையில் தீபாவளிக்கு கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.5000, அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு ரூ.1500 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அனைத்து செலவுகளுக்கும் ஒன்றிய அரசை நம்பியிருக்கும் புதுவை அரசால் இதை செய்ய முடியும்போது தமிழக அரசால் ஏன் செய்ய முடியாது? என்ற வினா எழுகிறது. எனவே, அமைப்பு சாராத் தொழிலாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடும் வகையில், அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ரூ.5,000 வீதம் ஊக்கத்தொகை வழங்க அரசு முன்வர வேண்டும்.

The post அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: