×

கலைத் திருவிழா போட்டிகள்

ஊத்தங்கரை, அக்.26: ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளியில் குறு வள மையம் சார்பில், ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் பற்குணன் தலைமை தாங்கினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர் ராமன், எஸ்எம்சி தலைவி ஈஸ்வரி, பிடிஏ உறுப்பினர்கள் கண்ணாயிரம், விஜயன், குறுவள மைய மேற்பார்வையாளர் வசந்தி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

The post கலைத் திருவிழா போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Oodhangarai ,Kuru Resource Center ,Kallavi Government Higher Secondary School ,Dr. ,Parkunan ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில்...