×
Saravana Stores

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 663 புள்ளிகள் சரிந்து 79,402 புள்ளிகளில் நிறைவு

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிய தொடங்கிய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1%க்கு மேல் சரிந்து, சற்று மீண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 663 புள்ளிகள் சரிந்து 79,402 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்து நிறைவு பெற்றது. இடைநேர வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 927 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து சற்று மீண்டு முடிவடைந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 21 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 219 புள்ளிகள் சரிந்து 24,181 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. இடைநேர வர்த்தகத்தின்போது நிஃப்டி 325 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து கடைசி நேரத்தில் சற்று மீண்டு முடிந்தது.

தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தைகளில் இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் 18.5% சரிந்து முடிந்தன. வியாழக்கிழமை வர்த்தகம் முடியும் போது ரூ. 1,280.05ஆக இருந்த இண்டஸ்இண்ட் வங்கிப் பங்கு வெள்ளிக்கிழமை ரூ.1,037ஆனது. 2024 ஜூலை-செப். காலாண்டில் இண்டஸ்இண்ட் வங்கியின் நிகர லாபம் 39% குறைந்து ரூ.1,325 கோடியாக குறைந்துள்ளது. 2023 ஜூலை செப். காலாண்டில் ரூ.2,181.47 கோடியாக இருந்த இண்டஸ்இண்ட் வங்கி நிகர லாபம் இவ்வாண்டு ரூ.856 கோடியாகும். இண்டஸ்இண்ட் வங்கியின் வாராக்கடன் விகிதம் 1.93%-லிருந்து 2.11%ஆக அதிகரித்ததும் அதன் பங்குவிலை சரியக் காரணமாகும்.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 663 புள்ளிகள் சரிந்து 79,402 புள்ளிகளில் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Bombay Stock Exchange ,Mumbai ,Mumbai Stock Exchange ,Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 592 புள்ளிகள் உயர்வு..!!