நடிகை சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சையாக பேசிய தெலங்கானா அமைச்சர் சுரேகாவுக்கு ஐதராபாத் சிவில் நீதிமன்றம் எச்சரிக்கை

ஐதராபாத்: நடிகை சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சையாக பேசிய தெலங்கானா அமைச்சர் சுரேகாவுக்கு ஐதராபாத் சிவில் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெலங்கானா அமைச்சர் கொன்ட சுரேகா அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நாக சைதன்யா – சமந்தா விவாகரத்துக்கு முன்னாள் அமைச்சர் கேடி ராமராவ் தான் காரணம் என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு நாகர்ஜூனா குடும்பத்தினர், சமந்தா, நாகசைதன்யா ஆகியோர் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக திரைத்துறையினர் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.இதைத் தொடர்ந்து அமைச்சரும் மன்னிப்பு கேட்டு இருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் கொன்ட சுரேகாவுக்கு எதிராக ஐதராபாத்திலுள்ள சிவில் நீதிமன்றத்தில் பிஆர்எஸ் செயல் தலைவர் கேடி ராமராவ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “அமைச்சரின் கருத்து மிகவும் ஆட்சேபனைக்குரியது. இதுபோன்ற கருத்துகள் சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ஆர் குறித்து அவதூறு பேச அமைச்சர் சுரேகாவுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் சர்ச்சை கருத்து தொடர்பான வீடியோவை சமூக ஊடக தளங்கள் மற்றும் டிஜிட்டல் சேனல்களில் இருந்து உடனடியாக நீக்கவும் உத்தரவிடுகிறோம், “இவ்வாறு தெரிவித்து வழக்கை முடித்துவைத்தது.

The post நடிகை சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சையாக பேசிய தெலங்கானா அமைச்சர் சுரேகாவுக்கு ஐதராபாத் சிவில் நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: