பெரியமேடு பகுதியில் ரூ.35 லட்சம் போலி நோட்டுகளை கொடுத்து 339 கிராம் தங்கம் அபேஸ் செய்தவர் கைது

சென்னை: தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் தெருவில் இயங்கி வரும் எல்.எச்.எக்ஸ்போர்ட் என்ற தனியார் தங்க நகைகள் செய்யும் நிறுவனத்தில் அமரஜித் ராய் (39) என்பவர் சேல்ஸ் மற்றும் கலெக்ஷன் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். மேற்படி நிறுவனத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சங்கம் கோல்டு நிறுவனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் போன் மூலம் தொடர்பு கொண்டு, 400 கிராம் முதல் 500 கிராம் உள்ள டோக்கியா செயின் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

அதற்கு, இந்த நிறுவனத்தின் உரிமையாளரின் உறவினர் பியுஷ் என்பவர், 339 கிராம் எடையுள்ள டோக்கியோ செயின் இருப்பதாக கூறியுள்ளார். உடனே அந்த நபர் தனக்கு தெரிந்த நபர் சென்னையில் இருப்பதாகவும், அவர் தங்களை தொடர்பு கொண்டு, 25,86,393 ரூபாயை கொடுத்துவிட்டு 339 கிராம் எடையுள்ள டோக்கியோ நகையை பெற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். இதன்படி மேற்படி நிறுவனத்தை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தற்போது பெரியமேடு, மசூதி அருகில் இருப்பதாகவும், நகையை இங்கு வந்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.

அதன்படி அமரஜித் ராய் நிறுவனத்தில் வேலை செய்யும் சுதாகர் என்பருடன் சேர்ந்து 339 கிராம் டோக்கியோ தங்க செயினை எடுத்துக் கொண்டு பெரியமேடு மசூதி அருகே வந்து மேற்படி நபரிடம் கொடுத்துள்ளனர். உடனே அந்த நபர் பையில் ரூ.35 லட்சம் இருப்பதாகவும் மீதமுள்ள பணத்திற்கு வேறு நகையை பிறகு வாங்கி கொள்வதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அமரஜித் ராய் பணத்தை பெற்றுக்கொண்டு கடையில் போய் பார்த்த போது அதில் போலி ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து அமரஜித்ராய் பெரியமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பெரியமேடு போலீசார் தீவிர விசாரணை செய்து, வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜஸ்தான் மாநிலம், கல்லூராம் (25) என்பவரை மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரில் வைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து 339 கிராம் தங்கச்செயின் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் அவரை கைது செய்தனர்.

The post பெரியமேடு பகுதியில் ரூ.35 லட்சம் போலி நோட்டுகளை கொடுத்து 339 கிராம் தங்கம் அபேஸ் செய்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: