×

அரசு மருத்துவக் கல்லூரி பெயரில் போலி இணையதள முகவரி தொடக்கம்

கிருஷ்ணகிரி, அக்.25: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி பெயரில் போலியாக இணையதள முகவரி தொடங்கி மோசடியில் ஈடுபட முயன்ற நபர்கள் யார்? என சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி டீனாக இருப்பவர் டாக்டர் பி.சந்திரசேகரன். இவர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 21ம் தேதி மர்ம நபர்கள் சிலர் போலியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி பெயரில் இணையதள முகவரியை உருவாக்கி உள்ளனர். மேலும் கல்லூரியில் இடம்தர பணம் தரவேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. இந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி பெயரில் போலி இணையதள முகவரி உருவாக்கி பணம் பறிக்க முயன்ற நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post அரசு மருத்துவக் கல்லூரி பெயரில் போலி இணையதள முகவரி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Govt Medical College ,Krishnagiri ,Krishnagiri Government Medical College ,Government Medical College ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் 100...