×

பர்கூர் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

கிருஷ்ணகிரி, அக்.25: பர்கூர் அடுத்த பிஆர்ஜி. மாதேப்பள்ளி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவரது மகன் கிருஷ்ண ஆதித்யா(6). இவன் நேற்று முன்தினம் மாலை, வீட்டின் முதல் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக சென்ற மின் ஒயரை, எதிர்பாராதவிதமாக கிருஷ்ண ஆதித்யா தொட்டுள்ளான். இதில் சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கந்திகுப்பம் போலீசார், சிறுவன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post பர்கூர் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Barkur ,Krishnagiri ,Naveen Kumar ,Mathepally Indira Nagar ,Krishna Aditya ,
× RELATED கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் பெரிய...