×

வெள்ளகோவில் அருகே மரத்தடியில் தூங்கியபோது லாரி ஏறி பெண் குழந்தை பலி

வெள்ளகோவில்,அக்.25: வெள்ளகோவில் அருகே மரத்தின் அடியில் தூங்கிய 10 மாத பெண் குழந்தை மீது லாரி ஏறியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. கரூர் மாவட்டம், கடவூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்முருகன் (31). மரம் வெட்டும் தொழிலாளி. இவர் கடந்த 4 நாட்களாக வெள்ளகோவில் அருகே கம்பளியம்பட்டியில் வளையக்காட்டு தோட்டம் பகுதியில் தனது குடும்பத்துடன் மரம் வெட்டி வந்துள்ளார்.பெற்றோர் மரம் வெட்டும் நேரத்தில் அவர்களது 10 மாத பெண் குழந்தை பவியாழினியை அருகே உள்ள மரத்தின் நிழலில் தூங்க வைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை லோடு ஏற்றிய லாரி காட்டிற்குள் திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக மரத்தின் அடியில் தூங்கி கொண்டிருந்த குழந்தை மீது ஏறியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து லாரி ஓட்டுநரான குண்டடத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (60) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து வெள்ளகோவில் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வெள்ளகோவில் அருகே மரத்தடியில் தூங்கியபோது லாரி ஏறி பெண் குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags :
× RELATED மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்