தீபாவளி பண்டிகையை ஒட்டி உள்நாட்டு பயணிகளுக்கு சலுகை பயண கட்டணம்: ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு

சென்னை: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை- பெங்களூரு உள்ளிட்ட சில உள்நாட்டு வழித்தடங்களில் சலுகை பயண கட்டணங்களை அறிவித்துள்ளது. அதன்படி சென்னை- பெங்களூரு, கொச்சி- பெங்களூரு, கவுகாத்தி-அகர்தலா, விஜயவாடா-ஐதராபாத் உள்ளிட்ட சில வழித்தடங்களில் இந்த சலுகை கட்டணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணம் செய்ய வரும் 27ம் தேதி வரையில், டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு சலுகை கட்டணம் ரூ.1606 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா வெப்சைட் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு, ரூ.1,456 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இம்மாதம் 27ம் தேதிக்குள், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், சென்னை- பெங்களூரு வழித்தடம் உள்ளிட்ட குறிப்பிட்ட விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் சலுகை கட்டண பயணத்தை நவம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 10 தேதி வரையில், 40 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த குறைந்த சலுகை கட்டண பயணத்தின் போது, பயணி ஒருவர், 3 கிலோ எடையுடைய உடமைகளை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். கூடுதலாக 15 கிலோ வரையிலான பொருட்களை எடுத்துச் செல்வதற்கு, ரூ. 1,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

The post தீபாவளி பண்டிகையை ஒட்டி உள்நாட்டு பயணிகளுக்கு சலுகை பயண கட்டணம்: ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: