மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 17 புள்ளிகள் சரிவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் குறைந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 17 புள்ளிகள் குறைந்து 80,865 புள்ளிகளானது. இடைநேர வர்த்தகத்தின்போது 269 புள்ளிகள் சரிந்து 79,813 புள்ளிகளுக்குச் சரிந்த சென்செக்ஸ் மீண்டது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 19 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36 புள்ளிகள் குறைந்து 24,399 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 17 புள்ளிகள் சரிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: