×
Saravana Stores

குறிப்பிட்ட சில வழித்தடங்களில் ஆன்லைனில் முன்பதிவு செய்தால் சலுகை கட்டணம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து குறிப்பிட்ட சில வழித்தடங்களில் விமானப் பயணம் செய்வதற்கு ஆன்லைனில் வரும் 27ம் தேதிவரை முன்பதிவு செய்பவர்களுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறைந்த சலுகை பயண கட்டணம் வழங்குவதாக ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் உள்பட ஒருசில உள்நாட்டு வழித்தடங்களில் குறைந்த சலுகை பயணக் கட்டணங்களை நேற்று மாலை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை-பெங்களூர், கொச்சி- பெங்களூர், கவுகாத்தி-அகர்தலா, விஜயவாடா-ஐதராபாத் உள்பட சில வழித்தடங்களில் சலுகை பயணக் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வழித்தடங்களில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணம் செய்வதற்கு, வரும் 27ம் தேதிவரை ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.1606 சலுகை கட்டணம் என்று அறிவித்துள்ளது.

மேலும், வரும் 27ம் தேதிக்குள் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சென்னை-பெங்களூர் வழித்தடம் உள்பட குறிப்பிட்ட விமானங்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்த பயணிகள், தங்களின் குறைந்த சலுகை பயண கட்டணத்தை நவம்பர் 1ம் தேதி முதல் 10ம் தேதி அல்லது 40 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். அதே நேரம், இந்த குறைந்த சலுகை கட்டண பயணத்தில், ஒருவர் 3 கிலோ எடையிலான உடைமைகள் மட்டுமே எடுத்து செல்ல முடியும். கூடுதலாக 15 கிலோ வரையிலான பொருட்களை எடுத்து செல்வதற்கு ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post குறிப்பிட்ட சில வழித்தடங்களில் ஆன்லைனில் முன்பதிவு செய்தால் சலுகை கட்டணம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Air India Express ,Meenambakkam ,Air India Express Airlines ,Diwali ,Chennai airport ,Diwali… ,Dinakaran ,
× RELATED திருச்சியிலிருந்து சார்ஜா புறப்பட்ட...