வழப்பறி வழக்கில் மூவருக்கு 5 ஆண்டு சிறை

திண்டுக்கல், அக்.24: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குமரப்பட்டியை சேர்ந்தவர் அழகேசன் (30). இவரது நண்பர்கள் யோகேஸ்வரன்()28, வினோத்(30). இவர்கள் கடந்த ஆண்டு மே.15ம் தேதி நத்தம் – துவரங்குறிச்சி குமரப்பட்டி பகுதியிலிருக்கும் பாலத்தில் இரவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த ஹரிதர்சன் (எ) மது (27), மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (21), நத்தம் பரளிபுதுாரை சேர்ந்த அபிமன்யூ (23) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்து பணம் ரூ.2000, மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக குமரேசன் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதித்துறை நடுவர் கனகராஜ் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் மூவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.

The post வழப்பறி வழக்கில் மூவருக்கு 5 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: