12 கி.மீ. வேகத்தில் நகரும் டாணா புயல்

டெல்லி: மத்திய கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்ட டாணா புயல் கடந்த 6 மணி நேரத்தில் 12 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக டாணா புயல் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் நகரும் வேகம் சற்று குறைந்தது. மேற்குவங்கத்தின் சாகர் தீவுகளிலிருந்து 540 கி.மீ. தூரத்தில் டாணா புயல் மையம் கொண்டுள்ளது. ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்துக்கு 460 கி.மீ. தொலைவிலும், தாமாராவுக்கு 490 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

The post 12 கி.மீ. வேகத்தில் நகரும் டாணா புயல் appeared first on Dinakaran.

Related Stories: