கோவையில் நவ.4-ல் கலைஞர் நூலகத்திற்கு அடிக்கல்.. எல்காட் ஐ.டி. பூங்காவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!!

கோவை: கோவையில் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவை நவ.4ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நாமக்கல் அருகே பொம்மகுட்டைமேட்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நேற்று கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நவம்பர் மாதம் முதல் எல்லா மாவட்டங்களிலும் கள ஆய்வு செய்ய உள்ளேன். திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்,”என்றார். இதையடுத்து. நவம்பர் 4ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை செல்கிறார்.

அங்கு விளாங்குறிச்சியில் 2.66 லட்சம் சதுர அடி பரப்பளவில் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. 2020-ல் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், 4 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து நவம்பர் 4ம் தேதி நடைபெறும் விழாவில் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும் நகரின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வளங்களை மேம்படுத்தும் வகையில் கலைஞர் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.காந்திபுரத்தில், 300 கோடி ரூபாயில் கருணாநிதி நுாற்றாண்டு நுாலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

The post கோவையில் நவ.4-ல் கலைஞர் நூலகத்திற்கு அடிக்கல்.. எல்காட் ஐ.டி. பூங்காவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!! appeared first on Dinakaran.

Related Stories: