×
Saravana Stores

கோவையில் இன்று அனைத்து கட்சி கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

 

கோவை, அக். 23: கோவை மாவட்ட அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு இன்று (புதன்) காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ‘‘க.க.சாவடி அருந்ததியர் வாழும் பகுதியில் எப்.எல்.2 என்னும் தனியார் மதுபான கடை திறக்க அனுமதி அளிக்கக்கூடாது’’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

தமிழக தலித் மக்கள் விடுதலை கழக பொதுச்செயலாளர் ஆ.முனுசாமி தலைமை தாங்குகிறார். ஆதி தமிழர் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் அ.நாகராசன் எழுச்சி உரையாற்றுகிறார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தென்னரசு, தமிழக மக்கள் விடுதலை கட்சி தலைவர் வெள்ளிமலை உள்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி பேசுகின்றனர்.

The post கோவையில் இன்று அனைத்து கட்சி கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : all-party confederation ,Goa ,COVEY ,South Tasildar ,All Party Federation of Goa District ,K. K. ,L.2 ,All ,Party Federation ,
× RELATED கோவையில் செவிலியர்களை படம் எடுத்த காவலர் சஸ்பெண்ட்..!