×
Saravana Stores

நீர் ஆதாரங்களை பாதுகாக்க கூட்டு முயற்சி அவசியம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லியில் தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு விருதுகளை வழங்கி பேசியதாவது: நிலத்தடி நீர் வேகமாக குறைந்து வருகின்றது. மாசுபாடு இந்த நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றது. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் நிலைநிறுத்துவதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. சுத்தமான தண்ணீரை பெறுவது ஒரு தேவை மட்டுமல்ல.

அடிப்படை மனித உரிமை. பொது சுகாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் பின்தங்கிய சமூகங்களின் நல்வாழ்வுக்கு தண்ணீர் முக்கியமானது. நிலத்தில் நன்னீர் தட்டுப்பாடு தெரிந்த போதிலும் பலர் தண்ணீர் சேமிப்பை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். நீர் சேகரிப்பு மற்றும் பாதுகாப்புக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கு கூட்டு முயற்சி அவசியமாகும். நமது முன்னோர்கள் அதனை பின்பற்றினார்கள்.

இப்போது தனிப்பட்ட லாபங்களுக்காக நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. யாரும் இல்லாதபோது குழாயில் வீணாகும் தண்ணீரை நிறுத்துவது, மேல் நிலை நீர்தேக்க தொட்டியில் நிரம்பி வழியும் தண்ணீரை தடுப்பது, அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பை நடைமுறைப்படுத்துதல் போன்ற தண்ணீர் சேமிப்புக்கான எளிய நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு திரவுபதி முர்மு பேசினார்.

The post நீர் ஆதாரங்களை பாதுகாக்க கூட்டு முயற்சி அவசியம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : President ,Dravupati Murmu ,New Delhi ,National Water Awards ,Delhi ,Dharupathi Murmu ,Dinakaran ,
× RELATED பேரவை தேர்தல் மூலம் புதிய அரசு அமைய...