ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டாசில் கைதான 26 பேர் அறிவுரை கழகத்தில் ஆஜர்: துப்பாக்கி ஏந்திய சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மொத்தம் 26 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் குண்டர் சட்டம் போடப்பட்டது தொடர்பான விசாரணைக்கு முக்கிய குற்றவாளிகளான ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், வியாசர்பாடி பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், திருவல்லிக்கேணியை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி மலர்கொடி, புளியந்தோப்பை சேர்ந்த முன்னாள் பாஜ நிர்வாகி அஞ்சலை உள்ளிட்ட 26 பேரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் விசாரணைக்காக போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர்.

பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக அறிவுரை கழகத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காவல் அதிகாரிகள் அனைவரும் பிஸ்டல் துப்பாக்கியுடன் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. குற்றவாளிகளின் உறவினர்களும் வந்திருந்தனர். இதனால் ராயபுரம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டாசில் கைதான 26 பேர் அறிவுரை கழகத்தில் ஆஜர்: துப்பாக்கி ஏந்திய சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: