×
Saravana Stores

2வது இன்னிங்சில் வங்கதேசம் 101/3: தென் ஆப்ரிக்கா 308 ரன் குவிப்பு

மிர்பூர்: தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 101 ரன் எடுத்து போராடி வருகிறது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 106 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்திருந்தது (41 ஓவர்). கைல் வெர்ரைன் 18, வியான் முல்டர் 17 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். முல்டர் அரை சதம் அடிக்க, வெர்ரைன் சதம் விளாசினார்.

இருவரும் 7வது விக்கெட்டுக்கு 119 ரன் சேர்த்தனர். முல்டர் 54 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த மகராஜ் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டானார். வெர்ரைன் – டேன் பியட் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 66 ரன் சேர்க்க, தென் ஆப்ரிக்கா ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. பியட் 32 ரன், வெர்ரைன் 114 ரன் (144 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்ப, தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 308 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ரபாடா 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட், ஹசன் மகமது 3, மெஹிதி ஹசன் மிராஸ் 2 விக்கெட் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, 202 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 2ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 101 ரன் எடுத்துள்ளது (27.1 ஓவர்). ஷத்மன் இஸ்லாம் 1, மோமினுல் ஹக் 1, கேப்டன் ஷான்டோ 23 ரன்னில் வெளியேறினர். ஹசன் ஜாய் 38 ரன், முஷ்பிகுர் 31 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 101 ரன் தேவை என்ற நிலையில் வங்கதேசம் இன்று 3ம் நாள் சவாலை சந்திக்கிறது.

The post 2வது இன்னிங்சில் வங்கதேசம் 101/3: தென் ஆப்ரிக்கா 308 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,South Africa ,Mirpur ,Mirpur National Stadium ,
× RELATED சில்லி பாயின்ட்…