×
Saravana Stores

காற்று மாசுபாடு எதிரொலி: டெல்லியில் 2ஆம் நிலை கட்டுப்பாடுகள் அமல்

டெல்லி: காற்று மாசுபாடு எதிரொலியாக டெல்லியில் 2ஆம் நிலை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. கட்டுப்பாடுகளை டெல்லி என்.சி.ஆர். பகுதியில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி சாலைகளில் இயந்திர துடைப்பு, தண்ணீர் தெளித்தல் ஆகியவற்றை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து வழித்தடங்களில் தூசிகளை அகற்ற காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தொழில்துறை, வணிகம், குடியிருப்புகளில் டீசல் ஜெனரேட்டர்களை செயல்படுத்த ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

The post காற்று மாசுபாடு எதிரொலி: டெல்லியில் 2ஆம் நிலை கட்டுப்பாடுகள் அமல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Delhi N. C. R. ,Dinakaran ,
× RELATED டெலிகிராம் பதிவால் பரபரப்பு; டெல்லி...